Announcement
ஒளிக்கீற்று அறிவுத் திறன் போட்டி 1434 - 2013இவ்வருடம் புனித ரமழானை முன்னிட்டு ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் ‘ஒளிக்கீற்று அறிவுத் திறன் போட்டி’ ஒன்றை நடாத்துகின்றது. வயது, பால் வித்தியாசமின்றி சகலரும் இப்போட்டியில் பங்குபற்றலாம். கொடுக்கப்படும் வினாக்களுக்கு வீட்டிலிருந்தவாறே எழுத்து மூலமாக விடையளிக்க முடியும்.
வெற்றிபெறும் முதல் மூன்று போட்டியாளருக்கு பெறுமதிமிக்க பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். விண்ணப்பப் படிவங்கள் தற்போது விநியோகிக்கப்படுகின்றன. விடைப் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி 2013.08.05 ஆகும்.
விண்ணப்பப் படிவம், விதிகள் தொகுப்பு, வினாக் கொத்து ஆகியவற்றை நேரடியாக பெற விரும்புவோர் இல.: 31, ஒழுங்கை இல.: 09, போல்ஸ் வீதி, புத்தளம் என்ற முகவரியில் அமைந்துள்ள ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் அலுவலகத்தில் ரூபா 100/= செலுத்தியும், தபால் மூலம் பெற விரும்புவோர் Centre for Spiritual Solidarity என்ற பெயருக்கு புத்தளம் தபால் நிலையத்தில் பெறக்கூடியதாக ரூபா 200/= க்கான காசுக் கட்டளை அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம். இவற்றுடன் ஒளிக்கீற்று நூலும் இலவசமாக வழங்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு:
ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
31, ஒழுங்கை இல.: 09,
போல்ஸ் வீதி, புத்தளம்
தொ.பே. 0325714252, 0715706222